<< inferiority inferiorly >>

inferiority complex Meaning in Tamil ( inferiority complex வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

தாழ்வு மனப்பான்மை,



inferiority complex தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தமிழரசி தன்னை மதிக்கவே இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் மன உளைச்சலடைகிறான்.

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.

நம்மால் பெரிதும் மதிக்கத்தக்க பல தேசியத் தலைவர்களும் பல உலகத் தலைவர்களும் இந்தத் தாழ்வு மனப்பான்மையினால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

தான் படிக்கவில்லை என்பதை அவன் தாழ்வு மனப்பான்மையாக எண்ணி வருந்தினான்.

ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி தூற்றினர்.

நம் தாழ்வு மனப்பான்மையானது சிலர் பிறக்கும் போது கூடவே ஒட்டிப் பிறந்துவிடுகிறது.

இது நடக்குமா நடக்காதா? நம்மால் முடியுமா? இப்படி நினைத்து நினைத்தே தாழ்வு மனப்பான்மையை உறுதி செய்து கொள்கின்றனர்.

மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார்.

தாழ்வு மனப்பான்மை மனித ஆளுமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

அவளுடைய தாழ்வு மனப்பான்மையால் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறாள்.

இதற்கான மனோதத்துவ காரணங்கள் பெருமளவில் மாறுபட்டாலும், பொதுவாக கவலை, சுய-மரியாதை பற்றிய தாழ்வு மனப்பான்மை, மற்றும் தன்னைத்தானே தோல்வியாக்கும் மனப்பாங்கு ஆகியவற்றையே சுற்றியுள்ளது.

இந்தத் தாழ்வு மனப்பான்மையானது, ஆண்,பெண் என்ற இரு சாராரையும் விட்டு வைப்பதில்லை.

இது காலப்போக்கில் ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் ஒரு மனோபாவம் நம்முள் வளர்வதை தாழ்வு மனப்பான்மை என்கிறோம்.

Synonyms:

complex,



Antonyms:

simplicity, easy,

inferiority complex's Meaning in Other Sites